கோவை: வால்பாறை ஆதிவாசி பெண்ணிற்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை பாலகிணரு செட்டில்மெண்ட்டை சேர்ந்தவர் சிவராணி மணிகண்டன் (24) கர்ப்பிணிப்பெண். இவருக்கு இரண்டாவது பிரசவம் கர்ப்பகாலத்தில் ஸ்கேன் பரிசோதனையில் இரட்டை குழந்தைகள் எனக்கண்டறியப்பட்டது.
கர்ப்பகாலத்தில் முறையான மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும் சோலையார்டேம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கி நன்கு கவனித்துக் கொள்ளப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் பாபு லக்ஷ்மன் ஆலோசனைப்படி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வால்பாறையில் பிரசவமுன் கவனிப்பு அறையில் கடந்த ஒரு வாரமாக தங்கவைக்கப்பட்டு கவனித்துக் கொள்ளப்பட்டது
இந்நிலையில் நேற்று இரவு சிவலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. வட்டார மருத்துவர் ஆலோசனைப்படி கர்ப்பிணிப் பெண்ணை 108 ஆம்புலன்ஸ் மூலமாக இரவு 12.40 மணிக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை அறுவை சிகிச்சை மூலமாக இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. தாயும் சேயும் நலமாக உள்ளதாக மகப்பேறு மருத்துவர் தெரிவித்தார்.