கோவையில் இரவு நேர ஊரடங்கின் போது குறு சிறு தொழிற்சாலைகள் இயங்க அனுமதி; மாவட்ட ஆட்சியருக்கு தொழில்முனைவோர்கள் நன்றி!

கோவை: கோவையில் இரவு நேர ஊரடங்கின் போது தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளித்த மாவட்ட ஆட்சியருக்கு தொழில்முனைவோர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் இரவு நேர ஊரடங்கின் போது தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளித்த மாவட்ட ஆட்சியருக்கு தொழில்முனைவோர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 20ம் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது. இதில் அத்தியாவசியம் மற்றும் சில குறிப்பிட்ட பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள் இரவு நேரம் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.

இதனிடையே, கோவை சேர்ந்த சிறு குறு தொழில்முனைவோர்கள் இரவு நேர ஊரடங்கின் போது தொழிற்சாலைகள் இயங்க மாவட்ட ஆட்சியர் நாகராஜனிடம் அனுமதி கேட்டிருந்தனர். இதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு கைத் தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. மேலும், தொழிற்சாலைகளில் சில குறிப்பிட்ட உற்பத்திக்கு மட்டும் அனுமதி வழங்கி இருந்தது. கோவையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறு சிறு தொழிலகங்கள் மேற்கண்ட அரசு அனுமதித்த தொழில் நிறுவனங்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிப்பில் ஈடுபடுவதால், இரவு நேரம் இயங்க கோவையில் உள்ள தொழில் அமைப்புகள் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கோரி இருந்தோம். இதற்கு மாவட்ட ஆட்சியர் பாதுகாப்பு நடவடிக்கையுடன் இயங்கிட அனுமதி அளித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...