கோவையில் நோடல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு... கொரோனாவை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை..!

கோவை: கோவை மாநகராட்சி பகுதி நோடல் அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கையாக விதிகளை மீறுவோரிடம் அபராதம் வசூல் செய்வது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சி பகுதி நோடல் அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கையாக விதிகளை மீறுவோரிடம் அபராதம் வசூல் செய்வது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலையில் இந்தியாவின் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் தினமும் 700 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இதில் மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 500 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர் நாகராஜன் உத்தரவுப்படி மாநகராட்சியில் மண்டல வாரியாக நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, கோவையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் பிரசன்னா ராமசாமி, மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் (கோயில் நிலங்கள் பிரிவு) மேனகா, வடக்கு மண்டலத்துக்கும் மாநகராட்சி துணை ஆணையர் மதுராந்தகி, கிழக்கு மண்டலத்துக்கும் கோவையில் உள்ள தமிழ்நாடு மாநில விற்பனைக் கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் சாதனைக்குறள், மேற்கு மண்டலத்துக்கும் கலால் பிரிவு துணை ஆணையர் கலைவாணி, மத்திய மண்டலத்துக்கும் நோடல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தற்போது கோவை மாநகராட்சி பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள், மண்டல வாரியாக மாநகராட்சி அதிகாரிகளிடம், கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில், சளி மாதிரிகளை அதிகளவில் சேகரிக்க வேண்டும். அங்கு காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தி, நோய் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். மண்டல அளவில் பரிசோதனை மையங்களை உருவாக்க வேண்டும். கொரோனா விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து அபராதங்களை வசூல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

நோடல் அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் கோவை மாநகராட்சி பகுதிகள் உள்ளதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...