திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் நான்கு வழி சாலை சந்திப்பில் திடீரென வடமாநில வாலிபர் ஒருவர் போக்குவரத்து சிக்னல் கம்பத்தின் மேல் ஏறி தலைகீழாகத் தொங்கியபடி தற்கொலை மிரட்டல் விடுத்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அந்த வாலிபரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

திருப்பூர் பல்லடம் நான்கு வழிச்சாலையில், வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் போக்குவரத்து சிக்னல் கம்பத்தின் மீது ஏறி தலைகீழாகத் தொங்கியபடி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், அவ்வழியே சென்ற கனரக லாரி ஒன்றை நிறுத்தி, அதன் உதவியுடன் அந்த வாலிபரை மீட்டனர்.
அதனைத் தொடர்ந்து, அந்த வாலிபர், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த பல்லடம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில், தற்கொலைக்கு முயன்ற வாலிபர், பீகாரைச் சேர்ந்த காகேஸ்வர் பெகரா என்றும் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவில் காரணம்பேட்டை பகுதியில் தனது செல்போன், ஓட்டுநர் உரிமங்களை யாரோ வழிப்பறி செய்து கொண்டு தன்னைத் தாக்கிவிட்டு சென்றதாகவும் தெரிவித்தார்.
மேலும், அந்த வாலிபர், தனக்கு ஓட்டுநர் உரிமம் தேவை என்றும் கல்குவாரியில் தான் வேலை செய்த இடத்தில் தன்னை வேலைக்கு சேர்த்துக் கொள்ளவில்லை என்றும் என் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது என்பதை தெரிவிக்கும் வகையில் இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து பல்லடம் போலீஸார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.