கோவையில் சக காவலர்களை மரியாதையின்றி பேசிய இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்!

கோவை: கோவையில் சக காவலர்களை மரியாதை இல்லாமல் நடத்தியதாகவும், அவதூறாக பேசியதாகவும் புகார் எழுந்ததை சட்டம்-- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.


கோவை: கோவையில் சக காவலர்களை மரியாதை இல்லாமல் நடத்தியதாகவும், அவதூறாக பேசியதாகவும்புகார் எழுந்ததை சட்டம்-- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

கோவை மாநகர போலீஸ் கமிஷனராக கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் கோவை மாநகரில் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். மாநகரில் பல ஆண்டுகளாக ஒரே ஸ்டேஷனில் பணியாற்றி வந்த உளவுத்துறை போலீசார் உட்பட பலரை அதிரடியாக இடமாற்றம் செய்தார். மேலும், புகார்களுக்கு உள்ளான போலீசார், சரியாக பணி செய்யாத போலீசாரையும் இடமாற்றம் செய்து வருகிறார்.

இந்நிலையில் சிங்காநல்லூர் சட்டம் - -ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரை நேற்று கட்டுப்பாட்டு அறைக்கு மாற்ற உத்தரவிட்டார். இது தொடர்பான உத்தரவை மைக்கில் தெரிவித்த கமிஷனர், இன்ஸ்பெக்டர் பயன்படுத்தி வந்த வாகனத்தை ஆயுதப்படையில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார். சக காவலர்களை மரியாதை இல்லாமல் நடத்தியதாகவும், அவதூறாக பேசியதாகவும் புகார் எழுந்த புகார் அடிப்படையில், துறை ரீதியான நடவடிக்கையாக இருக்கலாம் என, கூறப்படுகிறது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...