கோவையில் ஊழியர்களின் பி.எஃப் தொகையை செலுத்தாமல் தேவாலய பொறுப்பாளர்கள் ரூ.25 கோடி மோசடி!

கோவை: கோவையில் சிஎஸ்ஐ தேவாலய ஊழியர்களுக்கு செலுத்த வேண்டிய வருங்கால வைப்பு நிதியில் ரூ.25 கோடி மோசடி நடந்துள்ளதாக தேவாலய பொறுப்பாளர்கள் மீது பாதிரியார் புகார் அளித்துள்ளார்.


கோவை: கோவையில் சிஎஸ்ஐ தேவாலய ஊழியர்களுக்கு செலுத்த வேண்டிய வருங்கால வைப்பு நிதியில் ரூ.25 கோடி மோசடி நடந்துள்ளதாக தேவாலய பொறுப்பாளர்கள் மீது பாதிரியார் புகார் அளித்துள்ளார்.

கோவை வெள்ளலூர் சி.எஸ்.ஐ. சர்ச் பாதிரியார் கெர்சோம் ஜேக்கப் குற்றப்பிரிவு போலீசில் அளித்துள்ள புகாரில், “ 2005ம் ஆண்டு முதல், கோவை மண்டல சி.எஸ்.ஐ., ஆலய நிர்வாகத்தின் கீழ் பணியாற்றி வருகிறேன். நான் எனது வருங்கால வைப்பு நிதி தொகையை, சி.எஸ்.ஐ., அலுவலகத்திற்கு செலுத்தி வந்தேன்.எனது வருங்கால வைப்பு கணக்கு குறித்து, கேட்டபோது, சி.எஸ்.ஐ., அலுவலக பொருளாளர் எனக்கு எந்த விவரங்களும் தெரிவிக்கவில்லை.

எனது வருங்கால வைப்பு நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது மண்டலத்திற்கு உட்பட்ட, 125 சர்ச்சுகளில் பணிபுரிந்து வரும், என்னைப் போன்ற பலரது வருங்கால வைப்பு நிதியை, முறையாக கணக்கில் சேர்க்காமல், சுமார் ரூ. 25 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளனர்.

இந்த மோசடியில் முன்னாள் பொருளாளர் மங்களத்தாஸ், தற்போதைய பொருளாளர் செல்வகுமார், முன்னாள் செயலாளர் சார்லஸ் சாம்ராஜ், பிஷப் திமோத்தி ரவீந்தர் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது,” என குறிப்பிட்டுள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...