கோவை: ஞாயிறு முழு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் வாங்க சனிக்கிழமை அரை நேரம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கும்படி முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலைத் தோட்டங்களில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் வாரத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றிவிட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டுக்கு தேவையான அரிசி, பருப்பு, மளிகை, இறைச்சி போன்ற வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.
இந்நிலையில், வாரக்கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் கொரானா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொழிலாளர்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இதனைத் தவிர்க்க வருகின்ற 25.04.2021 அன்று முழு அடைப்பு காரணமாக தோட்ட தொழிலாளர்கள் சனிக்கிழமை அன்று வால்பாறை வந்து மார்கெட் வந்து செல்ல ஏதுவாகப் பிற்பகல் 1.00 மணிக்கு பணியினை கைவிட வேண்டி தோட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்த வேண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேட்பாளர் ஆறுமுகம் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் இன்று மனு அளித்துள்ளார்.