கோவை: வரதட்சணை கொடுமை செய்ததாக பெண் கொடுத்த புகாரில் கணவன் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் 1.8 கோடி மதிப்பிலான, 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலம், கொச்சி நகரம் பேரூர் காவல் நிலைய போலீசாருக்கு கேரளா மற்றும் கோவையில் ரூ 2000 கள்ள நோட்டு புழக்கத்தில் சிலர் விடுவதாக தகவல் கிடைத்தது. இதன் பேரில், கேரளா போலீஸ் தனிப்படையினர் நேற்று கோவை வந்து கரும்புக்கடை, வள்ளல் நகர் பகுதியில் உள்ள அஸ்ரப் வயசு 24 என்பவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில், அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் உக்கடம் அல்-அமீன் காலனி பகுதியில் உள்ள செய்யது சுல்தான் வயது 32 என்பவர் வீட்டில் கேரளா மற்றும் கோவை போலீசார் இணைந்து சோதனை நடத்தினார்கள் இந்த சோதனையில் ரூ 1.8 கோடி மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகள் கத்தை கத்தையாக பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நோட்டுகள் எங்கிருந்து வந்தது? யார் யாருக்கு புழக்கத்தில் விடப்பட்டது? என்பது உள்பட பல்வேறு தகவல்களை தனிப்படை போலீசார் இரண்டு பேரிடம் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், கைதான 2 பேரையும் விசாரணைக்காக கேரளாவுக்கு கொண்டு சென்றனர்.
கோவையில் கத்தை கத்தையாக ரூ 1.8 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் பிடிபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.