கோவை: கோவையில் இந்தாண்டில் இதுவரை இரண்டாயிரத்து 775 குழந்தைகள் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இரண்டாவது கொரோனா அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. கடந்தாண்டு கொரோனா நோய்த் தொற்று பரவியபோது குழந்தைகள் பெரியளவில் நோய்த்தொற்றால் பாதிக்கப்படவில்லை. அதேபோல் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் குறைந்தபட்ச பாதிப்பு மட்டுமே இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், தற்போது நாடு முழுவதும் மிக வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்று குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் தற்போது நாள்தோறும் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. மொத்த பாதிப்பில் சிறிய அளவாக இருந்தாலும் கடந்தாண்டை ஒப்பிடும்போது தற்போது குழந்தைகளுக்கு நோய்த்தொற்று பாதிப்பு அதிகமாக காணப்படுவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கடந்தாண்டு மார்ச் முதல் டிசம்பர் வரையில் 14 வயதுக்குட்பட்டவர்களில் 2 ஆயிரத்து 318 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், நடப்பாண்டு ஜனவரி முதல் திங்கள்கிழமை வரையில் 2 ஆயிரத்து 775 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் கடந்தாண்டு 10 மாதங்களில் இருந்த மொத்த பாதிப்பை காட்டிலும் 4 மாதத்தில் அதிகளவிலான குழந்தைகளுக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்கள், உறவினர்கள் மூலம் குழந்தைகளுக்கு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படக்கூடிய சூழல் உள்ளதால் குழந்தைகளின் நலன் கருதி பொது மக்கள் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத் துறையினர் கூறியதாவது: "கோவை மாவட்டத்தில் இதுவரை 5 ஆயிரத்து 93 குழந்தைகள் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தாயின் மூலமே நோய்த் தொற்று பரவியுள்ளது. அதிர்ஷ்டவசமாக குழந்தைகளுக்கு பெரியளவில் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டாலும் குழந்தைகள் ஆரோக்கியமாகவே உள்ளனர். ஆனால், 2 ஆவது அலையில் முன்பைவிட கூடுதலான குழந்தைகளுக்கு நோய்த் தொற்று பரவியுள்ளது. தற்போதும் பெற்றோர்கள் மூலம் அவர்களுக்கு நோய்த் தொற்று பரவியுள்ளது. இதனால் பெற்றோர்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது அவசியம். குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேவையில்லாத பயணங்களை தவிர்த்தல், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.'' என்றனர்.