நடிகர் விவேக்கின் ஒரு கோடி மரம் நடும் மாபெரும் கனவு... திமுக சுற்றுச்சூழல் அணியின் சார்பாக நிறைவேற்றப்படும்..!

மறைந்த நடிகர்விவேக் விட்டுச்சென்ற ஒரு கோடி மரம் நடும் பணியைத் திமுக சுற்றுச்சூழல் அணி மேற்கொள்ளும் என்று அந்த அணியின் மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி அறிவித்துள்ளார்.


மறைந்த நடிகர்விவேக் விட்டுச்சென்ற ஒரு கோடி மரம் நடும் பணியைத் திமுக சுற்றுச்சூழல் அணி மேற்கொள்ளும் என்று அந்த அணியின் மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘‘நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தன் நகைச்சுவையால் மக்களைச் சிரிக்க வைத்த, அதன் மூலம் சிந்திக்கவும் வைத்த சிறந்த நகைச்சுவை நடிகரும், குணச்சித்திர நடிகருமான பத்மஸ்ரீ திரு விவேக் அவர்களின் மறைவு நமக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

தனது நகைச்சுவையால் மக்களிடையே இருந்த அறிவியலுக்குப் புறம்பான எண்ணங்கள் குறித்துப் பல வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதன் காரணமாகவே தலைவர் கலைஞர் அவர்களால் ‘‘சின்னக் கலைவானார்'' என்று அழைக்கப்பட்டார்.

அதேநேரம், அவர் நடிகர் என்பதைத் தாண்டி தனிப்பட்ட முறையில் எனக்கு நல்ல நண்பராகவும், சுற்றுச்சூழல் முன்னெடுப்புகள் பலவற்றிலும் என்னுடன் துணை நின்றவராகவும் இருந்துள்ளார். மேலும், லட்சக்கணக்கான மரங்கள் நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய சிறப்புக்குரியவர்.

அந்த வகையில், மறைந்த நடிகர் திரு.விவேக் அவர்கள் 1 கோடி மரங்கள் நடுவதைத் தன் இலட்சியமாக வைத்திருந்தார்.

ஆனால், மரம் நடும் பணியை முழுமை செய்வதற்குள் இயற்கை அவரை எடுத்துக்கொண்டது. ஆனால், அவர் கொண்ட ஓர் உயர்ந்த இலட்சியத்தை நிறைவேற்றுவதே நாம் அவருக்குச் செய்யும் உண்மையான கைம்மாறாக இருக்கும். எனவே, அவர் நட்ட மரக்கன்றுகளின் மீதி எண்ணிக்கையை நடுவதற்கு நம் கழக சுற்றுச்சூழல் அணியின் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளோம்.'' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...