பூளவாடி கிராமத்து போலி மருத்துவர்... காவல் துறையினரால் கைது..!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதி பூளவாடி கிராமத்தில் சாய் கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை நடத்திவந்த போலி மருத்துவரை பொதுமக்களின் புகாரினைத் தொடர்ந்து குடிமங்கலம் காவல் துறையினர் கைது செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதி பூளவாடி கிராமத்தில் சாய் கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை நடத்திவந்த போலி மருத்துவரை பொதுமக்களின் புகாரினைத் தொடர்ந்து குடிமங்கலம் காவல் துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள பூளவாடி கிராமத்தில் சாய் கிளினிக் என்ற பெயரில் போலி மருத்துவமனை இயங்குவதாக அதே ஊரைச் சேர்ந்த ஒரு சிலர் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த கிளினிக் சென்ற காவல்துறையினர் அங்கு பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த தவமணி என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் பழனி அருகே உள்ள ஒரு மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றினார். அந்த அனுபவத்தை வைத்து உடுமலை அருகே பூளவாடி பெரியபட்டி ஜே கிருஷ்ணாபுரம் ஆகிய மூன்று பகுதிகளில் கிளை அமைத்து மருத்துவம் பார்த்து வந்ததாக தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட மருத்துவ உதவி இயக்குநருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அவரின் ஆலோசனைப்படி வட்டார மருத்துவ அலுவலர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது பூளவாடி சாய் கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வந்ததும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான அனைத்து மருந்தையும் அவர் விநியோகம் செய்து வந்ததாகவும் ஊசி போடுவது நோயாளிகளுக்கு குளுக்கோஸ் போடுவது போன்ற பணியையும் செய்து வந்துள்ளார். இதனை அடுத்து இவர் போலி மருத்துவர் என்பது தெரிய வந்துள்ளது. இதன்பின் குடிமங்கலம் காவல்துறையில் இவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் தவமணியை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...