பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் தரமற்ற அரிசியை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தநிலையில், வெகுண்டெழுந்த பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர்.

பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஒக்கிலிபாளையம் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில், அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று ரேஷன் பொருட்கள் வாங்க வந்தனர். அப்போது, நியாயவிலைக் கடையில் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட புழுங்கலரிசி முழுவதிலும் கற்களும் குப்பைகௐளும் நிறைந்து காணப்பட்டன. பொதுமக்கள் இதுகுறித்து நியாயவிலைக் கடை விற்பனையாளரிடம் கேட்டபோது, அவர் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனால், வெகுண்டெழுந்த பொதுமக்கள், தாங்கள் வாங்கிய தரமற்ற அரிசியை நியாய விலைக் கடை முன்பு வைத்து திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இந்த நியாய விலைக் கடையில் எடை குறைவாகவும், தரமில்லாத பொருட்களும் தொடர்ந்து வழங்கி வருவதாகவும், ஏதாவது ஒரு மளிகைப் பொருட்கள் வாங்கினால் மட்டுமே நியாயவிலைக்கடை பொருள்கள் வழங்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் தாங்கள் வாங்கிய தரமற்ற அரிசியை நியாயவிலைக் கடையிலேயே திருப்பிக் கொடுத்துவிட்டுத் திரும்பிச் சென்றதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.