திருப்பூரில் இரவு நேர ஊரடங்கை மீறியவர்களுக்கு அபராதம்!

திருப்பூரில் இரவு நேர ஊரடங்களை மீறியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் இரவு நேர ஊரடங்களை மீறியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதி வேகத்தில் பரவி வரும் சூழ்நிலையில் கடந்த நாட்களில் இல்லாத அளவுக்கு,தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 10,000ஐ கடந்துள்ளது.



கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நேற்று (ஏப்ரல் 20) முதல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.



இதையடுத்து இரவு நேர ஊரடங்கு மீறல்களை கண்காணிக்க திருப்பூர் மாவட்டத்தில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். திருப்பூர் ரயில் நிலையம், பழைய பேருந்து நிலையில் உட்பட முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் சோதனையிடப்பட்டன.



அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் தவிர, விதிமுறையை மீறி வெளியே சுற்றி திரிந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...