இரவு ஊரடங்கால் வெறிச்சோடிய வால்பாறை பேருந்து நிலையம்!

வால்பாறை: இரவு ஊரடங்கு அமலுக்கு வந்ததால் வால்பாறையில் பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது.


வால்பாறை: இரவு ஊரடங்கு அமலுக்கு வந்ததால் வால்பாறையில் பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் மதுரை, திருநெல்வேலி, கோவை, ஈரோடு, தர்மபுரி, திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

வெளியூர் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அடிக்கடி சொந்த ஊர்களுக்கு சென்று வருகிறார்கள். எனவே வால்பாறையிலிருந்து காலை 4 மணி முதல் இரவு 10 மணி அடிக்கடி வெளியூர்களுக்கு பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வந்தது. குறிப்பாக பொள்ளாச்சி, கோவை, பழனி, திருப்பூர் ஆகிய ஊர்களுக்கு அடிக்கடி அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வால்பாறையிலிருந்து தேயிலை தோட்ட பகுதிகள் மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட வெளியூர் செல்லும் அரசு பேருந்துகள் இரவு ஏழரை மணி அளவில் நிறுத்தப்பட்டுவிட்டன.



மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை இயக்கப்பட்ட பேருந்துகளில் மக்கள் கூட்டமின்றி காலி பேருந்துகளே பொள்ளாச்சி சென்றன. இதன் காரணமாக வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையம் வெறிச்சோடியது

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...