திருப்பூர்: திருப்பூரில் 12 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 1.80 கோடி கையாடல் செய்த வங்கியின் முதன்மை மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூரில்: திருப்பூரில் 12 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 1.80 கோடி கையாடல் செய்த வங்கியின் முதன்மை மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் எஸ் ஆர் நகர் இந்தியன் வங்கி கிளையின் முதன்மை மேலாளர் தண்டபாணி, தனது வங்கி கிளையில் கணக்கு வைத்திருந்த 12 வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து ரூ.1.80 கோடி பணத்தை கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்துஇந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் செந்தில்குமார், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் முதன்மை மேலாளர் தண்டபாணியை கைது செய்தனர். திருப்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட தண்டபாணி 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இந்த சம்பவம் திருப்பூர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.