கிணத்துக்கடவு பகுதியில் தடுப்பூசி பற்றாக்குறை!

கோவை: கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால் கிணத்துக்கடவு வட்டாரத்தில் தடுப்பூசி போடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.


கோவை: கொரானா தடுப்பூசி இருப்பு இல்லாததால் கிணத்துக்கடவு வட்டாரத்தில் தடுப்பூசி போடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரானா தொற்றின் 2-வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. எனவே, கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிப்பதுடன், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று அரசு வலியுறுத்தி உள்ளது. கொரோனா தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டி வந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால் தடுப்பூசி போடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.



கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள நல்லட்டிபாளையம், சொக்கனூர், வடசித்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கிணத்துக்கடவு அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சனிக்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால் திங்கட்கிழமை வரை தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று மாலை கிணத்துக்கடவு வட்டார பகுதிக்கு குறைந்தளவே தடுப்பூசிகள் வந்த நிலையில் இன்று காலை முதல் கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இன்று மட்டும் 210 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாகவும் தொடர்ந்து தட்டுப்பாடு இல்லாமல் தடுப்பூசி வந்தால் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் மிக தீவிரமாக நடைபெறும் என்று சுகாதாரத் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...