திருப்பூர்: ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் ஏற்படும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த நவீன கருவிகளுடன் வனத் துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனகோட்டத்தில் உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய நான்கு வனச்சரகங்கள் உள்ளது.
இப்பகுதிகளில் காட்டு தீ ஏற்பட்டால் அதை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நவீன கருவிகளை வனத்துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர். வெறும் கைகளால் காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாது. மேலும் வனப்பகுதிக்குள் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாது.

எனவே, மனிதர்கள் எளிதாக சுமந்து செல்லும் அளவிற்கு வடிவமைக்கப்பட்ட காற்றை வெளியேற்றி தீயை கட்டுப்படுத்தும் கருவியும் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் கருவியும் புதிதாக காட்டுத்தீ கட்டுப்படுத்தும் குழுவில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த கருவிகளை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து வனத்துறையினருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது.
மேலும், இந்த தீ தடுப்பு பணியில் ஈடுபடும் வன ஊழியர்களுக்கு சிறப்பு உடைகளும் காலணிகளும் வழங்கப்பட்டது. இந்த பயிற்சியில் ஆனைமலை புலிகள் காப்பக உதவி இயக்குனர் கணேஷ் ராம் மற்றும் உடுமலை வனச்சரகர் தனபாலன் அமராவதி வனச்சரகர் சுரேஷ் கொழுமம் வனச்சரகர் மற்றும் வந்தரவு வனச்சரகர் முருகேசன் ஆகியோர் பங்கேற்றனர்.