திருப்பூர்: கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக உடுமலைப்பேட்டை அரசு கலைக்கல்லூரியில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.

ஆனால், உடுமலை பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடுமலை அரசு மருத்துவமனையில் வைத்து சிகிச்சைகள் வழங்கி குணப்படுத்தினர். இதனால் இந்த கலைக்கல்லூரி வளாகத்தில் ஏற்படுத்தப்பட்ட சிறப்பு முகாமுக்கு யாரையும் அனுப்பவில்லை. அதன்பின் கொரோனாவின் தாக்கம் குறைந்ததால் மீண்டும் கல்லூரி மாணவர்கள் அங்கு சென்று படித்து வந்தனர்.
இந்நிலையில், தற்பொழுது கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மீண்டும் ஏராளமான பொதுமக்கள் அந்த நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, மீண்டும் அரசு கலைக்கல்லூரியை சிறப்பு சிகிச்சை மையமாக மாற்ற நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் நூறு படுக்கை அறை கொண்ட சிறப்பு முகாமாக மீண்டும் தயாராகி வருகிறது.