ஓய்வு நாட்கள் பறிக்கப்படுவதை கண்டித்து கோவையில் போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்!

கோவை: கோவை சுங்கம் அருகே உள்ள பேருந்து பணிமனை முன்பாக போக்குவரத்துக் கழகத்தில் செயல்படும் அனைத்து தொழிற் சங்கங்களின் சார்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: கோவை சுங்கம் அருகே உள்ள பேருந்து பணிமனை முன்பாக போக்குவரத்துக் கழகத்தில் செயல்படும் அனைத்து தொழிற் சங்கங்களின் சார்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தமிழ்நாடு அரசு மற்றும் போக்குவரத்து கழகங்களின் தன்னிச்சையான விடுப்பு விதிமுறைகள் மாற்றம் செய்துள்ளதை திரும்பப் பெற வலியுறுத்தியும், கொரோனா நோய் தொற்று சம்பந்தமாக அரசின் விதிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தியும், விடுப்பு இல்லாதவர்களுக்கு ஊதியம் பிடித்தலை கைவிட வலியுறுத்தும், போக்குவரத்து துறை பணியாளர்களுக்கு முறையான வார ஓய்வு, ஊதியம் வழங்கும் தேதியை முறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.



அதனை தொடர்ந்து, வார ஓய்வு வழங்குவதில் நிர்வாகம் தொடர்ந்து முரண்பட்ட முடிவுகளையே எடுத்து வருவதாகவும், முதலில் வார ஓய்வுக்கும் முன்னும் பின்னும் ஓய்வு எடுத்து இருந்தால் வார ஓய்வு கிடையாது என்றும், பின்னர் வாரத்தில் 48 மணி நேரம் பணி செய்கிற நிலை இல்லை என்றால் வார ஓய்வு கிடையாது என்றும், தற்போது வழங்கியுள்ள அறிக்கையில் வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுப்பு எடுத்து இருந்தால் வார ஓய்வு கிடையாது என்றும் அறிவித்துள்ளனர். மேலும் பல தொழிலாளர்களின் வார ஓய்வு வேலை நிறுத்தத்தை காரணம் காட்டி பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.

அதேபோல, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் மாநகரப் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - விழுப்புரம் ஆகியவற்றில் மாதத்தின் இறுதி நாட்களில் சம்பளம் வழங்கும் முறையும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, சேலம் மற்றும் கோவை ஆகிய கழகங்களில் மாதத்தின் முதல் நாளில் ஊதியம் வழங்கும் முறையும் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. தற்பொழுது ஊதிய தேதி கழகங்களின் விருப்பப்படி என்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால் ஊதியம் வழங்கும் தேதி தள்ளிப் போவதாகவும் இது முற்றிலும் ஊதியம் வழங்கும் சட்டத்திற்கு எதிரானது என்றும் தெரிவித்தனர்.



மேலும், தேர்தல் முடிந்து அரசு எந்தவித கொள்கை முடிவுகளையும் எடுக்க முடியாத இந்த சூழ்நிலையில் தொழிலாளர்கள் பணிநிலை சம்பந்தப்பட்ட கொள்கை முடிவுகளை அரசு திரும்பப் பெற வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் புதிய அரசு கொள்கை முடிவுகளை எடுக்கும் வரை எந்த மாற்றங்களும் மேற்கொள்ளக்கூடாது என்று தெரிவித்தனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...