உதகை: உதகை தாவரவியல் பூங்கா கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரண்டாவது முறையாக மூடப்பட்டது!

நீலகிரிக்கு ஆண்டுதோறும் 30 லட்சத்திற்கு மேல் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள்தாவரவியல் பூங்காவை பார்க்காமல் சென்றதில்லை.
ஏப்ரல், மே, ஜூன் தொடக்கம் வரையிலான 60 நாட்கள் கொண்ட சீசனில் நாளொன்றுக்கு சராசரியாக 15 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வீதம் ஆண்டுக்கு குறைந்த பட்சம் 9 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்தப் பூங்காவை கண்டு ரசித்து செல்வர், இவர்களை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான சுற்றுலா வியாபாரிகள் உள்ளனர். ஆண்டுதோறும் மே மாதம் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சியை காண்க நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இவ்வளவு சிறப்பு மிக்க இந்த உதகை தாவரவியல் பூங்காவை கடந்த 1938 செப்டம்பர் 1ம் தேதி முதல் 1945 ஆம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி வரைநடைபெற்ற இரண்டாம் உலகப் பாேரின் பாேது இந்தப் பூங்காவை தற்காலிகமாக மூடுவதற்கு பூங்கா அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்த போது கூட அப்போது ஆங்கிலேயே அரசு அதை நிராகரித்தது.
இரண்டாம் உலகப் போர் நெருக்கடியில் மூடப்படாத இந்தப் பூங்கா 172 ஆண்டுகளுக்குப் பின் கடந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் மார்ச் மாதம் முதல் முறையாக மூடப்பட்டது. அதன் பின் தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரண்டாவது முறையாக இன்றுமூடப்பட்டது. இதேபோன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களான படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம், ஆறாவது மைல், ரோஜா பூங்கா, டால்பினோஸ் மற்றும் லேம்ஸ்ராக் காட்சி முனைகளும் மூடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக சுற்றுலா தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான வியாபாரிகள், சுற்றுலா வாகன ஓட்டுனர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், காட்டேஜ் உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர், இதனால் ஏறக்குறைய 250 முதல் 300 கோடி வர்த்தகம் பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. நான்கு மாத சுற்றுலா வருமானத்தை வைத்து ஓராண்டு வாழ்க்கை நடத்தும் சுற்றுலா வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.