கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பந்தய சாலை சீர்குலைந்துள்ளதாக திமுக குற்றச்சாட்டு!

கோவை: கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட பந்தய சாலை குரங்கு கையில் கிடைத்த பூமாலையைப் போல சீர்குலைந்துள்ளதாக திமுக மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் குற்றம் சாட்டி உள்ளார்.


கோவை: கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட பந்தய சாலை குரங்கு கையில் கிடைத்த பூமாலையைப் போல சீர்குலைந்துள்ளதாக திமுக மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் குற்றம் சாட்டி உள்ளார்.

இது குறித்து கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் நா.கார்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

“கோவையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.40 கோடி செலவில் பந்தய சாலை (ரேஸ் கோர்ஸ்) பகுதியில், திட்டப்பணிகளை கடந்த 12.06.2020 அன்று, எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். மக்களின் பயன்பாட்டில், நல்ல நிலையில் இருந்த இந்த சாலையை பெயர்த்து எடுத்து, மீண்டும் புதிய சாலை அமைப்பதாக கூறி, மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பது முறையா?

சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் மற்றும் மக்களிடம் எந்த ஒரு கருத்தும், ஆலோசனைகளும் கேட்காமல், இப்பகுதியில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு, சாலைகளின் அளவுகள் குறைக்கப்பட்டு, விளம்பரப் பலகைகள் நிறுவப்பட்டு, வணிக மயமாக்கப்பட்டு வருகிறது.

மெதுவாக இந்த இடத்தின் அடையாளம் பறிபோய்விட்டது. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களால் நடைபயிற்சிக்கு பயன்படுத்தப்பட்டு வந்த நோக்கம் இப்போது சிதைக்கப்பட்டுள்ளது.

தூய்மையான காற்றின் மூலம் ஆக்ஸிஜன் வழங்கும் இயற்கையின் வரப்பிரசாதமாக இருந்த மரங்களை வெட்டி சாலைகளை ஆக்கிரமித்துசுற்றுப்புற சூழல், நடைபயிற்சி, சாலை பாதுகாப்பு, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவைகளுக்கு சீர்கேடு ஏற்படும் வகையில்,எஸ்.பி.வேலுமணியின் தலைமையின் கீழ் அவசர அவசரமாக திட்ட பணிகள் நடைபெறுகின்றன.

தினமும் இந்த பந்தய சாலையை பயன்படுத்தி வந்த ஆயிரக்கணக்கான பொது மக்களுக்கு அவசியமில்லாத, எந்த ஒரு உபயோகமும் இல்லாத பல வண்ணமயமான விளக்குகள் மற்றும் உலோக கட்டமைப்புகளுடன் இப்பகுதி வணிக மயமாக மாற்றப்பட்டு வருகிறது.

இயற்கை எழில் சூழ பசுமையாக, கோவையின் நுரையீரலாக இருந்த இப்பகுதி தற்போது செயற்கையான உலோக கட்டமைப்புகளுடன்“குரங்கு கையில் சிக்கிய பூமாலையைப் போன்று” காட்சியளிக்கிறது. இவை, கோவையில் உள்ள மக்களிடம் பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா பூங்காக்கள், உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு பூங்காக்கள், மாநகராட்சி பொது நிதியில் அமைக்கப்பட்ட பூங்காக்களில் மரங்கள், செடிகள் நீரின்றியும், போதிய பராமரிப்பு இன்றியும் புதர் மண்டி காணப்படுகின்றன.

சிறுவர்கள் விளையாடும் சாதனங்கள் துருப்பிடித்து உபயோகப்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இந்த பூங்காக்களை பராமரிப்பதற்கு மேற்கண்ட நிதியை செலவிட்டு இருந்தால் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருந்திருக்கும்.

எஸ்.பி.வேலுமணி என்ற ஒரு தனி மனிதரின் சுயநலத்திற்காகவும், சுய லாபத்திற்காகவும் கோவையின் அடையாளங்கள் சிறிது சிறிதாக அழிக்கப்பட்டு வருகின்றன.

ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்கு அவசர அவசரமாக டெண்டர்கள் விடப்பட்டு, ஊழல் முறைகேடுகள் செய்வதில் மட்டும் கவனம் செலுத்தப்பட்டது. தரமில்லாத பொருட்களைக் கொண்டு, மக்களுக்கு எந்த ஒரு உபயோகமும் இல்லாமல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

அரசின் சார்பில் மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளால், மக்களுக்கு பலன் கிடைக்க வேண்டும். ஆனால் கோவையில், மக்களின் வரிப்பணத்தை வீணடித்து, மக்களை ஏமாற்றி செய்யப்படும் மேற்கண்ட திட்டப்பணிகள் அனைத்தும் ‘விழலுக்கு இறைத்த நீரைப் போல’உள்ளது

கோவை மாநகராட்சி ஆணையாளர் உடனடியாக இதில் தலையிட்டு, பந்தய சாலை பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் என்ற பெயரில் , இயற்கையை சீரழிக்கும்அனைத்து மக்கள் நல விரோத பணிகளையும்உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

வரும் மே மாதம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன், கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் நடக்கும் முறைகேடுகள்,நிர்வாகச் சீர்கேடுகளுக்கு மக்கள் மன்றத்தின் முன்பு சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல வேண்டிய காலம் வெகுதொலைவில் இல்லை.”இவ்வாறு நா.கார்த்திக் தெரிவித்துள்ளார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...