கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவை குற்றாலம் அருவி தேதி அறிவிக்கப்படாமல் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
கோவை: கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவை குற்றாலம் அருவி தேதி அறிவிக்கப்படாமல் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
கோவையில் முக்கிய சுற்றுலா தளமாக திகழக்கூடிய கோவை குற்றாலம். இந்த அருவியில் குளிப்பதற்காக வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து பல பேர் இங்கு வருவது வழக்கம். விடுமுறை நாட்கள் மற்றும் ஓய்வு நாட்களில் இங்கு கூட்டம் கலைகட்டும்.
இந்நிலையில், ஊரடங்கு மற்றும் பரவல் காரணமாக இன்று முதல் கோவை குற்றாலம் மூடப்படுகிறது. கோவையில் முக்கிய சுற்றுலாத்தலமாக கோவை குற்றால அருவியில் குளிக்க வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இதனிடையே, தற்போது தொற்று அதிகரித்துள்ளது. எனவே 50 சதவீத சுற்றுலா பயணிகள் மட்டுமே அருவிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டன. அதன்படி 1000 பேரை மட்டுமே அருவிக்குச் செல்ல வனத்துறையினர் அனுமதி தந்தனர்.
இந்த நிலையில், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி, கோவை குற்றால அருவி இன்று செவ்வாய்க்கிழமை முதல் தேதி அறிவிக்கப்படாமல் மூடப்படுவதாக வனத் துறை அறிவித்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.