கோவை சிறுமுகை அருகே போலீஸ் எஸ்.ஐக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது!

கோவை: கோவை சிறுமுகை அருகே போலீஸ் எஸ்.ஐ க்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவை சிறுமுகை அருகே போலீஸ் எஸ்.ஐ க்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிறுமுகை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் முனிசா மி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை பணியில் இருந்தனர். அப்போது, பொகழூர் அருகே மயில்சாமி என்பவரின் தோட்டத்தில் உள்ள தென்னைமரத்தின் மட்டை மயில்சாமி என்பவர் மீது விழுந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.

இந்த தகவலையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனுசாமி மற்றும் போலீசார் பொகலூர் செல்வதற்காக மாலை 6.30 மணிக்கு சிறுமுகை நீலிப்பாளையம் ரோட்டில் ராமணன் தோட்டம் அருகில் சென்று கொண்டிருந்தபோது எதிரே இருசக்கர வாகனங்களில் 4 பேர் வேகமாக வந்தனர்.

இதையடுத்து, உடனே போலீசார் 2 வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதை தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் முனுசாமியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் முனுசாமி சிறுமுகை போலீசில் புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி வழக்குப்பதிவு செய்து பொகலூர் வட வள்ளியை சேர்ந்த சந்தோஷ் (26), ரங்கசாமி (31), நந்தகுமார் (31) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய சுரேஷ் (28) என்பவரை தேடி வருகின்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...