வால்பாறை நகரைச் சுற்றி உலா வரும் சிறுத்தை - கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை!

கோவை: வால்பாறை நகரைச் சுற்றி சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: வால்பாறை நகரைச் சுற்றி சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறையின் முக்கிய பகுதியான வாழைத்தோட்டம் அண்ணா நகர் புதுத் தோட்டம் பகுதியில் சிறுத்தை நடமாடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா பொருத்தி தீவிரமாக கண்காணித்து வந்தனர்.



இந்த நிலையில், தற்போது வாழைத்தோட்டம் பகுதியை ஒட்டியுள்ள ஆற்றுப்படுகையிலும் நல்ல காத்து எஸ்டேட் பிரிவு சாலையில் உள்ள தேயிலைத் தோட்டத்திலும் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

வனவர் முனியாண்டி தலைமையில் இரண்டு குழுக்கள் சிறுத்தையை பிடிக்க வைத்துள்ள கூண்டுகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து வனத்துறையினர் தீவிர ரோந்து பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் வீட்டில் சேகரமாகும் மாமிசக் கழிவுகளை குழிதோண்டி புதைக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...