கோவை: கோவை விமானநிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்கு மேல் எந்த விமானசேவையும் இயக்கப்படுவதில்லை என்பதால் ஊரடங்கால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இல்லை.

தமிழகம் முழுவதும் நாளை முதல் இரவு 10:00 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை விமான நிலைய வட்டாரங்கள் கூறுகையில், "கோவை விமான நிலையத்தில் நோய்தொற்று பரவலுக்கு முன் வழக்கமாக இரவு 11:00 மணி வரை விமானங்கள் இயக்கப்பட்டன. அதிகாலை 4:00 மணி முதல் மீண்டும் விமான சேவைகள் தொடங்கின.
தற்பொழுது மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள காரணத்தால் அங்கு விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது கோவையில் தினமும் இரவு 9:00 மணிக்கு மேல் எந்த விமானமும் புறப்படுவதும் இல்லை வேறு நகரங்களிலிருந்துகோவையில் தரையிறங்குவதும் இல்லை.
ஏர் அரேபியா நிறுவனம் அதிகாலையில் ஷார்ஜாவுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் விமானங்கள் இயக்குகிறது. அந்த விமானம் அதிகாலை 4:00 மணியளவில் தரையிறங்கி அரை மணி நேரத்துக்குள் மீண்டும் புறப்பட்டு சென்று விடுகிறது. எனவே தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு கோவை விமான நிலையத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது." இவ்வாறு, ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.