கோவையில் செயினை பறிக்க முயன்ற இளைஞரை பிடித்த துணிச்சல் பெண்!

கோவை: கோவையில் செயினை பறிக்க முயன்ற இளைஞரை, பெண் ஒருவர் பொதுமக்கள் துணையுடன் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.


கோவை: கோவையில் செயினை பறிக்க முயன்ற இளைஞரை, பெண் ஒருவர் பொதுமக்கள் துணையுடன் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

கோவை சூலூரை அடுத்துள்ள வதம்பச்சேரி பகுதியை சேர்ந்த லோகநாயகி (30) நேற்று மொபட்டில் காமநாயக்கன் பாளையத்தில் மளிகை பொருட்கள் வாங்கச் சென்றார்.

மளிகை பொருட்கள் வாங்கி விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை ஒரு இளைஞர்பின் தொடர்ந்து வந்துஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் யோகநாயகி கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். சுதாரித்துக்கொண்ட லோகநாயகி நகையை இறுக்கமாகப் பிடித்து கொண்டு இளைஞரை தள்ளிவிட்டார். இதில் நிலை தடுமாறி அந்த இளைஞர் கீழே விழுந்தார்.

லோகநாயகி தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அவரை மடக்கி பிடித்த படி கூச்சல் போட்டார். அவரது கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இளைஞரை பிடித்து சுல்தான் பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் திருச்சி லால்குடி யைச் சேர்ந்த ராஜதுரை (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுபோன்று சூலூர் அடுத்துள்ள கரையான் பாளையத்தைச் சேர்ந்த சாம்சங், வீட்டு மதில் சுவர் மீது நேற்று நள்ளிரவு ஒருவர் நடந்து சென்றதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். சுதாரித்த மக்கள், அவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் வீட்டு உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இளைஞனை கைது செய்தனர்.

அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பொன் ஜோஸ் (21) என்பது தெரியவந்தது. திருட்டு முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை சூலூர் போலீசார் கைது செய்தனர். சூலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கஞ்சா கடத்தல், வழிப்பறி போன்ற செயல்கள் அதிகரித்திருப்பதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...