கோவையில் பேருந்து கண்ணாடியை கல்வீசி உடைத்த இந்து முன்னணி வாலிபர்கள் 2 பேர் கைது!

கோவை: கோவையில் பேருந்து கண்ணாடியை கல்வீசி உடைத்த இந்து முன்னணி வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவையில் பேருந்து கண்ணாடியை கல்வீசி உடைத்த இந்து முன்னணி வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் நேற்று செல்வபுரம் பகுதியில் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதை இரண்டு பேர் மறைந்து நின்று கற்களை கொண்டு தாக்கினர். இதில் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது.



அதனை தொடர்ந்து ஓட்டுநர் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேருந்து கண்ணாடியை உடைத்த நபர்களை தேடி வந்தன.

இந்த நிலையில், இன்று விசாரணையில் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ராகுல் வயது 19, ராஜேந்திரன் வயது 20, இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் என்பதும் இவர்கள் கல்லூரியில் படிக்கிறார்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் பேருந்தை கல் வீசி உடைத்ததை ஒத்துக் கொண்டனர். தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...