மறைந்த நடிகர் விவேக்கிற்கு கோவை நடிகர் சங்கம் மெழுகுவர்த்தி ஏந்தி 59 மரங்கள் நட்டு அஞ்சலி!

கோவை: மறைந்த நடிகர் விவேக்கிற்கு கோவை மாவட்ட நடிகர் சங்கம் சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி அவரின் நினைவாக 59 மரக்கன்றுகள் நடப்பட்டது.


கோவை: மறைந்த நடிகர் விவேக்கிற்கு கோவை மாவட்ட நடிகர் சங்கம் சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி அவரின் நினைவாக 59 மரக்கன்றுகள் நடப்பட்டது.

பிரபல நகைச்சுவை நடிகரும், மரங்கள் நடும் ஆர்வலருமான நடிகர் விவேக் உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்தார். தமிழகம் மட்டுமின்றி பெரும் உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட நடிகர் சங்கம் சார்பாக அதன் தலைவர் சாகுல் தலைமையில் நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆத்துப்பாலம் பாப்புலர் வளாகத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக குட்டிப்புலி பிரபல நடிகர் ராஜசிம்மன், நகைச்சுவை நடிகர் சாப்ளின் பாலு,விஜய் மக்கள் இயக்க மாணவரணி தலைவர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மறைந்த நடிகர் விவேக்கின் ஆன்மா சாந்தியடைய அவரது படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து சின்னக்கலைவாணர், நடிகர் விவேக்கின் ஒரு கோடி மரங்கள் நடும் பணியை அனைத்து இயற்கை ஆர்வலர்கள் மற்றும் இளம் தலைமுறையினர் தொடரும் வகையில், அவரது 59 வது பிறந்தநாளை நினைவு கூறும் விதமாக அந்த வளாகத்தில் 59 மரக்கன்றுகள் நடப்பட்டது.

கோவை மாவட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் ஜெயன், பூபேஷ் மற்றும் உபைதுர் ரஹ்மான், உமர், முஜி, ஜலீல், பாபுகான் மற்றும் வெண்ணிலா ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...