கோவை மாநகரில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இதுவரை ரூபாய் 1 கோடி அபராதம் வசூல்!

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாநகர் முழுவதும் காய்ச்சல் பரிசோதனை அதிகரிக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பொதுமக்கள் வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். சளி காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

அதேபோல, பொது மக்கள் முக கவசம் அணிந்து வெளியே செல்கிறீர்களா? சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா? என கண்காணிக்க கோவை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் 40 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் கோவை மாநகர போலீசாரும் இணைந்து அரசின் நடவடிக்கைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

முககவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200, சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு ரூபாய் 500, என அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் கோவை மாநகராட்சி வடக்கு மண்டலங்களில் ஆயிரத்து 700 பேரும் கிழக்கு மண்டலத்தில் 6,300 பேர், மேற்கு மண்டலத்தில் 3,400 பேர். எனவே மொத்தத்தில் 11 ஆயிரத்து 400 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதுவரை கோவை மாநகராட்சி பகுதியில் அரசின் வழிகாட்டு முறைகளை பின்பற்ற அவர்களிடமிருந்து ரூபாய் 99 லட்சத்து 16 ஆயிரத்து 355 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கோவை மாநகரில் உள்ள முக்கிய சிக்னல்களில் போக்குவரத்து போலீசார் முக கவசம் அணியாமல் சென்ற அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...