வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவுதல் அதிகரித்து வருகிறது. தற்போது வரை 17 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், வால்பாறை அருகே உள்ள சிறுகுன்றா என்ற எஸ்டேட் பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, நேற்று சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமைக்கு சென்று உள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
வால்பாறை பகுதியில் நோய் தொற்று பரவுதல் அதிகரித்து வருவதால், சுகாதாரத் துறை, காவல் துறை மற்றும் நகராட்சி துறை இணைந்து நோய் பரவுவதை தடுப்பதற்காக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
முகக்கவசம், சமூக இடைவெளி, கை கழுவுதல் போன்ற கட்டுப்பாடுகளை விதித்து வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் நோய் கட்டுப்பாடு விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.