கோவை: பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஆழியாறு அணை பூங்கா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை மற்றும் குரங்கு அருவி ஆகியவை கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களாக உள்ளன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் நோய்த்தொற்று காரணமாக மூடப்பட்ட இந்த சுற்றுலாத்தலங்கள் நோய் தொற்று குறைந்ததன் அடிப்படையில், தமிழக அரசு ஊரடங்கு பல்வேறு தளங்களை அறிவித்து, ஒன்பது மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டன.
இந்நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் மீண்டும் நோய்த்தொற்று அதிகரித்து வரும் காரணமாக தமிழக அரசு நோய் கட்டுப்பாட்டு விதிகளை துரிதப்படுத்தி உள்ளது.
இதனடிப்படையில், இன்று காலை முதலே ஆழியார் அணை பூங்கா மற்றும் அணைப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
மேலும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பூங்கா மற்றும் அணை நுழைவாயில் பகுதிகளை மூடி விழிப்புணர்வு பதாகைகளை வைத்துள்ளனர். மேலும் நோய் தொற்று காரணமாக நாளை முதல் குரங்கு அருவியும் மூடப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.