கோவை: திருமணம் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் 50% பேர் பங்கேற்க அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் தங்களுடைய வாக்காளர் அட்டையை மொத்தமாக அரசிடம் ஒப்படைக்கப்படும் என தமிழ்நாடு ஹையர் கூட்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சங்கத்தின் தலைவர் ஜெயசீலன் செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் கூறியதாவது:

கொரோனா நோய்த்தொற்று பரவல் முதல் அலை ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து எங்கள் சங்கத்தினர் மீண்டு வரவில்லை. இந்த சூழ்நிலையில் தற்போது இரண்டாவது அலை பரவல் காரணமாக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது எங்கள் சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ள அனைத்து தொழில்களையும் கடுமையாக பாதித்துள்ளது.
எனவே, தமிழக அரசு திருமணம் உள்ளிட்ட அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் 50 சதவீத பங்கேற்பாளர்களுக்கு அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிட வேண்டும். அப்போது மட்டுமே இதை நம்பி உள்ள மேடை அலங்காரம், சாமியானா பந்தல் அமைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் பர்னிச்சர் வாடகைக்கு விடுபவர்கள் உள்ளிட்ட பல தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.
எங்கள் வாழ்வாதாரத்தை காக்க தமிழக அரசு தவறும்பட்சத்தில் அனைவரின் வாக்காளர் அடையாள அட்டையை அரசிடம் ஒப்படைத்து விடுவோம். தவிர எங்கள் தொழிலில் நாங்கள் பயன்படுத்தி வரும் உபகரணங்கள் அனைத்தையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொண்டு வந்து வைத்துவிட்டுச் சென்றுவிடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.