கோவை: வால்பாறை தேயிலை தோட்டங்களில் உரம் போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த வாரம் வால்பாறை பகுதியில் கோடை மழை பெய்துள்ளது. மேலும் தேயிலை செடிகளுக்கு தேவையான சாரல் மழையும் சூரிய வெப்பமும் மாறி மாறி கிடைக்கும் சமமான சீதோசன நிலை நிலவுகிறது.

இதன் காரணமாக தேயிலை செடிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக தேயிலை தோட்ட நிர்வாகம் யூரியா m.o.p. கலந்த உர கலவையை தேயிலை செடிகளின் வேர்களில் தூவும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.