கோவை: தமிழகத்தில் இருந்து கேரளா சொல்வோருக்கு இன்று முதல் இ பாஸ் கட்டாயம் - வாளையார் எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!
கோவை: தமிழகத்தில் இருந்து கேரளா சொல்வோருக்கு இன்று முதல் இ பாஸ் கட்டாயம் செய்யப்பட்டுள்ள நிலையில், வாளையார் எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மிக தீவிரமடைந்துள்ளது. இதனால் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக கேரளாவில் திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகள் நடத்த இணையதளம் மூலம் அனுமதி பெற வேண்டும், அதேபோல, 75 முதல் 100 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் கேரளாவில் 13,835 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவே ஒரே நாளில் கேரளாவில் பதிவான அதிக எண்ணிக்கை தொற்று உறுதியான பதிவாகும். இதனால் கேரள எல்லைகளில் அம்மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

குறிப்பாக வாளையாறு, வேலந்தாவலம் உள்ளிட்ட 13 சோதனை சாவடிகள் மூடப்பட்டு கோவை வழியாக கேரளா சொல்வோருக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஆர்.டி.பி.சி.ஆர் சான்றிதழ் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இ-பாஸ் பெறாமல் வரக்கூடிய பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று முதல் நாள் என்பதால் சோதனை சாவடிகளில் இருந்தவாறு இ-பதிவு செய்ய வைத்து அனுப்புகின்றனர். நாளை முதல் இபாஸ் பெறாமல் வருவோர் கட்டாயமாக திரும்பி அனுப்பப்படுவார்கள் என கேரளா போலீசார் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் கோவை சென்று திரும்புவோர் 48 மணி நேரத்திற்குள் எடுத்த ஆர்.டி.பி.சி.ஆர் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் கடும் வெயில் உள்ளதால் நிழலான இடத்தில் பொதுமக்களை நிறுத்தி சோதனை செய்ய வேண்டும் என இங்கு வரும் வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.