கோவை: பொள்ளாச்சி அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருந்து வரும் பழங்குடியின மக்களை காலி செய்யச் சொல்லி மிரட்டும் தோட்டத்து உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பழங்குடியின மக்கள் புகார் அளித்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள காளியாபுரம் வன எல்லையை ஒட்டி உள்ள பகுதி காக்கா கொத்தி பாறை. இங்கு 30க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் அரசு புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அங்கு வசிக்கும் பழங்குடியின மக்களை அருகில் உள்ள தோட்டத்து உரிமையாளர் ஒருவர் காலி செய்யும்படி மிரட்டி வருவதாக பழங்குடி இன மக்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,
நாங்கள் காக்கா கொத்தி பாறை பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இந்த நிலையில் அந்தப்பகுதியில் தோட்டம் வைத்துள்ள ராமநாதன் என்பவர் எங்களை அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றும் வகையில் அந்த நிலம் தன்னுடையது என்றும், எங்களுடைய குடிசைகளை அகற்றக்கோரியும் மிரட்டுகிறார். இது குறித்து வருவாய் துறை மற்றும் காவல் துறைக்கு ஏற்கனவே புகார் அளித்துள்ளோம்.
இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. தற்பொழுது நாங்கள் வசித்து வரும் இந்த நிலம் அரசுக்கு சொந்தமானது. அதற்கான ஆவணங்கள் இணைத்துள்ளோம். எனவே அரசு எவ்வித வாழ்வாதாரமின்றியும், அடிப்படை வசதிகள் இன்றியும் அந்த பகுதியில் குடிசை போட்டு வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு பட்டா வழங்கி அடிப்படை வசதிகள் செய்து தருமாறும் பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.