அதிகாலையில் ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை!

கோவை: கோவையில் அதிகாலை 3 மணி அளவில் ரயில் முன்பு பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் அதிகாலை 3 மணி அளவில் ரயில் முன்பு பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில், “ஐலண்ட் எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை 3 மணி அளவில் கோவையை நோக்கி வந்துகொண்டிருந்தது. அது இருகூர் அருகே வந்து கொண்டிருந்த போது காதலர்கள் இருவரும் ரயில் முன் பாய்ந்தனர்.

ரயில் அதிவேகமாக வந்ததால் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களின் உடல்கள் துண்டு துண்டாக தூக்கி வீசப்பட்டு பட்டது. சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதிகாலையில் அந்த பகுதியில் நடைபயிற்சி சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ரயில்வே போலீசாருக்கு தெரிவித்தனர்,” என்று கூறினர்.

உடனடியாக ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

முதல்கட்ட விசாரணையில் இருவரும் காதலர்கள் என்பது தெரியவந்துள்ளது. எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எதற்காக கோவை வந்தார்கள்? ஊர் பெயர் விவரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...