கோவையில் குடிபோதை தகராறில் தொழிலாளி கொலை!

கோவையில் குடிபோதையில் தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.

கோவை: கோவையில் குடிபோதையில் தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.

கோவை காந்திபுரம் ஒன்பதாவது வீதியில் புதிய கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதற்காக பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருக்கும் தொழிலாளர்கள் கட்டடம் கட்டும் இடத்திலேயே தங்கி வேலை செய்து வருகின்றனர்.

விருதுநகரைச் சேர்ந்த மொய்தீன் (37), திருச்சியைச் சேர்ந்த துரை (60) ஆகிய இரண்டு கட்டடத் தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர் கொடுத்த அறையில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

அறையில் இருந்த போது நேற்று இரவு இருவருக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. இதன் பின்னர் இருவரும் மது குடித்து விட்டு வந்தனர்.

நள்ளிரவில் மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்தது. மிதமிஞ்சிய மதுபோதையில் இருந்த, துரை ஆத்திரமடைந்து மொய்தீனை அங்கிருந்த கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு ஓடிவிட்டார்.

மொய்தீனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார் தலைமறைவான துரையை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று இரவு கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...