திருப்பூரில் பொது நிகழ்ச்சிகளுக்கு கூடுதல் தளர்வுகள் வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

திருமணம் உள்ளிட்ட பொது பொது நிகழ்ச்சிகளுக்கு கூடுதல் தளர்வுகள் வழங்க கோரி விழாக்களுக்கு பொருட்களை வாடகைக்குத் தரும் நிறுவனங்களின் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேளதாளங்களுடன் வந்து மனு அளித்தனர்



திருப்பூர்: திருமணம் உள்ளிட்ட பொது பொது நிகழ்ச்சிகளுக்கு கூடுதல் தளர்வுகள் வழங்க கோரி விழாக்களுக்கு பொருட்களை வாடகைக்குத் தரும் நிறுவனங்களின் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேளதாளங்களுடன் வந்து மனு அளித்தனர்

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று 2வது அலை வேகமாக பரவி வரக் கூடிய சூழ்நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

இந்நிலையில் தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் சார்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேளதாளங்கள் ஊர்வலமாக வந்து மனு அளித்தனர்.



அந்த மனுவில், “கடந்த வருடம் அமல்படுத்தப்பட்ட கொரோனா தடுப்பு ஊரடங்கின் காரணமாக திருமணம் உள்ளிட்ட பொது விசேஷங்கள் எளிமையான முறையில் நடத்தப்பட்டன. இதனால், எங்கள் அமைப்பின் கீழ் உள்ள வாடகை பாத்திரக்கடை, ஒலி ஒளி அமைப்பாளர்கள், மேடை அலங்கார அமைப்புகள் செய்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தற்போது மீண்டும் கட்டுப்பாடுகள் விதித்து இருப்பதன் காரணமாக எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் சூழ்நிலை நிலவுகிறது. எனவே, திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகள் நடத்த கூடுதல் தளர்வுகள் வழங்க வேண்டும்,” எனக் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...