கோவை அருகே மூதாட்டியை கழுத்தை நெரித்து கொன்று அவரிடம் இருந்த நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கோவை: கோவை அருகே மூதாட்டியை கழுத்தை நெரித்து கொன்று அவரிடம் இருந்த நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கோவை மாவட்டம், துடியலூர் அருகே பன்னிமடையில் முத்துலட்சுமி ( 72) என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்தார். அவருடைய மகன்கள், மகள் வெளியூரில் வசிக்கின்றனர். இவர்கள் தினமும் முத்துலட்சுமியின், மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம்.
அதைப்போல முத்துலட்சுமிக்கு நேற்று காலை வழக்கம்போல அவர்களது உறவினர்கள் மொபைலில் அழைத்துள்ளனர். ஆனால், முத்துலட்சுமி அவர்களின் அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்கள் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். பக்கத்து வீட்டுக்காரர்கள்வந்து பார்த்தபோது, முத்துலட்சுமி காயங்களுடன் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர் அணிந்து இருந்த மூக்குத்தி, கம்மல் உள்ளிட்ட நகைகள் காணாமல் போயிருந்தன.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மூதாட்டியின் உறவினர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நகைக்காக, 'முத்துலட்சுமி கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருக்கலாம்' என, போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.