கொரோனா அறிகுறிகள் தென்பட்டவுடன் சிகிச்சைக்கு வரவேண்டும்! கோவை மருத்துவக் கல்லூரி முதல்வர் நிர்மலா கூறினார்.

கோவை : கொரோனா அறிகுறிகள் தென்பட்ட உடனேயே சிகிச்சை பெற முன்வரவேண்டும் என்று கோவை மருத்துவக் கல்லூரி முதல்வர் நிர்மலா அறிவுறுத்தி உள்ளார்.

கோவை : கொரோனா அறிகுறிகள் தென்பட்ட உடனேயே சிகிச்சை பெற முன்வரவேண்டும் என்று கோவை மருத்துவக் கல்லூரி முதல்வர் நிர்மலா அறிவுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த இரு வாரங்களில் பாதிப்பு இரட்டிப்பாகி உள்ளது.

கடந்த சில தினங்களாக, உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதுவரை, 707 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலாகூறியதாவது: “கொரோனா பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் சிலர், நோய்த் தொற்றின் தீவிரத்தால் உயிரிழக்கின்றனர்.

கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்ட உடன் அலட்சியமாக இருந்து விட்டு, நோய் முற்றியபிறகு தாமதமாக சிகிச்சைக்கு வருவதால் அனுமதிக்கப்பட்ட, 24 மணி நேரத்தில் உயிரிழப்பு நேருவது அதிகரிக்கிறது

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 50 சதவீத உயிரிழப்புகளுக்கு, நோயாளிகள் தாமதமாக சிகிச்சை வருவதுதான் காரணம். காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, வயிற்றுப்போக்கு, தலைவலி, வாந்தி ஆகிய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.

மருத்துவர்களின் அறிவுரைப்படி செயல்பட்டால் உயிரிழப்பை தவிர்க்கலாம். உடனடி சிகிச்சையால், உயிரிழப்பை முற்றிலும் கட்டுப்படுத்தலாம்.”

இவ்வாறு அவர் கூறினார்

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...