உக்கடத்தில் குழாய் பதிக்கும் பணியின் போது திடீரென ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி கொண்ட தொழிலாளியை சக தொழிலாளர்கள் மீட்டனர்.
கோவை : உக்கடத்தில் குழாய் பதிக்கும் பணியின் போது திடீரென ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி கொண்ட தொழிலாளியை சக தொழிலாளர்கள் மீட்டனர்.
கோவை உக்கடம், ஹவுசிங் யூனிட் பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொக்லைன் இயந்திரம் மூலம் சாலை தோண்டப்பட்டு, குழாய்கள் பதிக்கப்படுகின்றன.
குழாய் பதிக்கும் பணியில் நேற்று முற்பகல் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மண் சரிந்து, தொழிலாளி ஒருவரின் மீது விழுந்தது.
அந்த தொழிலாளியின் கால் மண்ணில் சிக்கியது. அருகில் இருந்தவர்கள் மற்றும் தொழிலாளர்கள் துரிதமாக செயல்பட்டு, அவரை மீட்டனர்.
இதில், அந்த தொழிலாளியின் கால்களில் லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக விரைந்து செயல்பட்டு சக தொழிலாளியை மண் சரிவில் இருந்து மீட்ட தொழிலாளர்களை அந்தப் பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.