அம்பேத்கர் விசிகவுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல என இந்து மக்கள் கட்சி கண்டனம்!

அம்பேத்கர் அனைவருக்குமான தலைவர் என்றும் அவர் விசிகவுக்கு மட்டும் சொந்தமல்ல என்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உறுதிபடத்தெரிவித்துள்ளார்.

கோவை: அம்பேத்கர் அனைவருக்குமான தலைவர் என்றும் அவர் விசிகவுக்கு மட்டும் சொந்தமல்ல என்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உறுதிபடத்தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோவையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அர்ஜூன் சம்பத்,

“அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 14ம் தேதி சென்னையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் சென்னை அம்பேத்கர் மணி மண்டபத்திற்கு சென்று உள்ளனர்.

அப்போது அங்கிருந்த திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் இந்து மக்கள் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். எங்களை தாக்கவும் முயற்சி செய்தனர்.

மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் 6ம் தேதி அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அம்பேத்கர் மணி மண்டபத்திற்கு சென்ற போதும் இதே போன்று எங்களை தாக்கி அவமானப்படுத்தினர்.

அம்பேத்கர் அனைவருக்குமான தலைவர் என்பதால் எங்களுக்கும் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்த உரிமை உண்டு, இது மாதிரியான அமைப்புகள் அம்பேத்கருக்கு ஒரு சாதி சாயம் பூசும் வேலையில் ஈடுபட்டு உள்ளன.

இந்து மக்கள் கட்சியினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் விசிக, திராவிட கழகம், பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...