தமிழக அரசு கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் வரும் செவ்வாய் முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. இதன்படி இரவு 10:00 மணி முதல் காலை 4:00 மணி வரை தொடர்ந்து செயல்படும் தொழிற்சாலைகள் மட்டும் அனுமதியுடன் செயல்பட வேண்டுமென அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு குறித்து கோவை தொழில்துறையினர் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு.
தமிழக அரசு கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் வரும் செவ்வாய் முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. இதன்படி இரவு 10:00 மணி முதல் காலை 4:00 மணி வரை தொடர்ந்து செயல்படும் தொழிற்சாலைகள் மட்டும் அனுமதியுடன் செயல்பட வேண்டுமென அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு குறித்து கோவை தொழில்துறையினர் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு.
தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (SIEMA) தலைவர் கார்த்திக் கூறியதாவது: நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை முழுமனதுடன் வரவேற்கிறோம். இருப்பினும் தொடர்ந்து செயல்படக்கூடிய தொழிற்சாலைகள் என்று அறிவித்துள்ளதை மாற்றி அனைத்து தொழிற்சாலைகள் இரவு முழுவதும் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
தொழில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை இரவு 10:00 மணிக்கு முன் தொழில் நிறுவன வளாகத்துக்குள் வருவதையும் 4:00 மணிக்கு பின் தொழில் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதையும் உறுதிப்படுத்த தயாராக இருக்கின்றனர். அரசு தற்போது அறிவித்துள்ள தொடர்ந்து செயல்படக்கூடிய தொழில் நிறுவனங்கள் பட்டியலில் பவுண்டரி மற்றும் டெக்ஸ்டைல் துறை மட்டுமே அடங்கும். தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அனைத்து தொழில் நிறுவனங்களும் இரவு தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும். இதுகுறித்த அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும்." என்றார்.
கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்க (கொடிசியா) தலைவர் ரமேஷ் பாபு கூறுகையில், " அரசின் முயற்சிக்கு வரவேற்பு தெரிவிக்கிறோம். இருப்பினும் நோய்த்தொற்று முதல் அலை ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து இன்னும் தொழில்துறையினர் மீண்டு வரவில்லை. இத்தகைய சூழ்நிலையில் தொழில் நிறுவனங்கள் இரவு நேரம் செயல்பட அனுமதி மறுத்தால் மிகப்பெரிய தாக்கத்தை தொழில்துறைக்கு ஏற்படுத்தும்.
முதல் அலை நோய்த்தொற்று பரவியபோது தொழில் நிறுவனங்களில் பெரிய அளவில் நோய் தொற்று கண்டறியப்படவில்லை. நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து அரசு வெளியிட்டுள்ள வழிமுறைகளை சரியான முறையில் தொழில்நிறுவனங்கள் பின்பற்றி வருவதே இதற்கு காரணம். எனவே இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு அனைத்து தொழில் நிறுவனங்களும் இரவு செயல்பட அனுமதிக்க வேண்டும். அவர்கள் அறிவிப்பில் தொழில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை இரவு 10:00 மணிக்குள் பணிக்கு வருவதையும் காலை 4:00 மணிக்கு பின் மட்டுமே தொழில் நிறுவன வளாகத்தை விட்டு வெளியே செல்வதை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவிக்கலாம்." என்றார்.
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (TACT) மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறுகையில், " தமிழக அரசின் அறிவிப்பு குழப்பமாக உள்ளது. தொடர்ந்து செயல்படும் நிறுவனங்கள் என்றால் பவுண்டரி மற்றும் டெக்ஸ்டைல் துறை மட்டுமே பட்டியலில் இடம்பெறும். அனைத்து தொழில் நிறுவனங்களும் இரவு நேரங்களில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும். இரவு நேர பணிக்கு வரும் தொழிலாளர்கள் ஐயோ அல்லது செயல்படும் தொழில் நிறுவனங்களையோ சோதனை
என்ற பெயரில் போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகள் துன்புறுத்தக் கூடாது." என்றார்.