திருப்பூர் அதிகரிக்கும் கொரோனா..! தனியார் திருமண மண்டபங்கள் மற்றும் கல்லூரிகளில் 450 படுக்கைகளோடு சிகிச்சை மையம் தயார்!

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக தனியார் திருமண மண்டபங்கள் மற்றும் கல்லூரிகளில் 450 படுகைகளோடு சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக தனியார் திருமண மண்டபங்கள் மற்றும் கல்லூரிகளில் 450 படுகைகளோடு சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டுள்ளது.



நாடு முழுவதும் கொரானா தொற்று வைரஸ் பரவல் இரண்டாம் அலை வேகமாக பரவி வரக் கூடிய சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலும் தினந்தோறும் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.



இதுவரை 1,866 பேர் சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமல்லாது தனியார் திருமண மண்டபங்கள் மற்றும் கல்லூரிகளில் தற்போது சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டு வருகிறது.



அதற்காக தற்போது முதல் கட்டமாக 450 படுகைகளோடு அவிநாசி, தாராபுரம் பகுதிகளில் தனியார் கல்லூரிகளிலும், உடுமலையில் அரசு கலை அறிவியல் கல்லூரியிலும், திருப்பூர் கல்லூரி சாலையில் தனியார் திருமண மண்டபம் உள்ளிட்ட படுக்கை வசதிகளுடன் சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட கூடிய வகையில் மருத்துவக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...