கோவை: இயற்கையின் காதலர் விவேக்குக்கு இயற்கையை காக்கும் இதய அஞ்சலி செலுத்துவதாக கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நவீன் குமார் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கவிதை நடையில் வெளியிட்டுள்ள அஞ்சலி குறிப்பில், “ஒரு கோடி மரம் நடுவோம் என்ற கனவோடு பயணித்தார், பயணம் பாதியில் முடிந்த தேனோ, அடுத்த தலைமுறை இளைஞர்கள் இருக்கின்றோம் மிச்சம் இருக்கின்ற உந்தன் மரம் நடும் இலக்கை எட்டிப் பிடிப்பது தான் உங்களுக்கு அடுத்த தலைமுறை செய்கின்ற அஞ்சலியாக இருக்கும் என்ற எண்ணத்தோடு... இயற்கையைக் காக்கும் இதய அஞ்சலியாக மரம் நடுகிறோம்...
காற்றோடு கலந்துவிட்ட சின்ன கலைவாணரே தென்றலாய் மாறி இந்த பூமியில் வீசிக் கொண்டே இருங்கள். இதோ மரம் நடுகிறோம்.. சமூக அக்கறையும் முற்போக்கு சிந்தனையும் வளர்ந்து ஓங்கட்டும் இதோ மரம் நடுகிறோம்.

இதயம் நின்று போனாலும் இதயத்தில் எழுதிய உறவுகளுக்கு என்றும் அழிவில்லை காலமெல்லாம் நிலைத்திருக்கும், மரங்களாய் தொடர்ந்து கொண்டிருக்கும், இதோ மரம் நடுகிறோம்.
மிகச்சிறந்த மனிதநேயராக தாங்கள் எண்ணற்றோர்க்கு எண்ணிலடங்கா உதவிகளைச் செய்த கருனை உள்ளம் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டும் பூத்துக் காய்கட்டும். இதோ மரம் நடுகிறோம்.

கலைத்துறையில் முற்போக்குசிந்தனை கொண்ட நகைச்சுவை நாயகன், இயற்கையை காக்க கலாம் தேர்ந்தெடுத்த கதாநாயகன், காலம் ஏமாற்றும் என்று கனவா கண்டோம், லட்சக்கணக்கான இளைஞர்கள் எதிர்கால சிந்தனை உடையவர்கள் உங்கள் கனவை நிறைவேற்றுவோம்,
இதோ மரம் நடுகிறோம்.. இயற்கை அஞ்சலி செலுத்துகிறோம்,”என தெரிவித்துள்ளார்.