கோவையில் இருந்து வெளிநாட்டு விமான சரக்கு சேவை கட்டணத்தை குறைக்க கோரிக்கை!

கோவை: கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களை அதிகரிப்பதுடன், சரக்கு கட்டணத்தையும் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.


கோவை: கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களை அதிகரிப்பதுடன், சரக்கு கட்டணத்தையும் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இது குறித்து கோவை 'ஏர் கார்கோ' வட்டாரங்கள் கூறியதாவது, "கொரோனா நோய் தொற்று பரவலுக்கு பின் சர்வதேச போக்குவரத்து பிரிவில், கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் சர்வீஸ் வழங்கப்படுகிறது. இந்த விமானம் எப்போதுமே அதிக பயணிகளுடன் செல்கிறது. இந்த விமானத்தில் சராசரியாக ஒவ்வொரு முறையும் இரண்டரை டன் கார்கோ ஏற்றி செல்லப்படுவது வழக்கம். ஆனால் விஷு பண்டிகைக்கு பின், கார்கோ புக்கிங் செய்யப்படுவது கணிசமாக குறைந்து விட்டது

தற்போது அதிகபட்சமாக ஒன்றரை டன் வரை மட்டுமே கார்கோ ஏற்றி சொல்லப்படுகிறது. மறுபுறம் கோவையில் இருந்து அனுப்பப்படும் கார்கோ, திருச்சி விமான நிலையம் மூலம் பல்வேறு வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப் படுகிறது. திருச்சியில் இருந்து அதிக அளவுக்கு சர்வதேச விமான சேவைகள் வழங்கப்படுவது தான் இதற்கு முக்கிய காரணமாகும். திருச்சியில் இருந்து தினமும் சிங்கப்பூர், ஷார்ஜா, துபாய், கோலாலம்பூர், உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

கோவை விமான நிலையத்தில் ஒரே ஒரு விமானம் மட்டுமே தற்போது சர்வதேச பிரிவில் இயக்கப்படுகிறது. தவிர கார்கோ அனுப்புவதற்கு கோவையில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. திருச்சியில் கட்டணம் குறைவு என்பதும் கோவையில் கார்கோ போக்குவரத்து சரிவடைந்து வருவதற்கு முக்கிய காரணமாகும். ஏற்கனவே கேரளாவில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் இருந்து பல வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருவது கோவை விமான நிலையத்துக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

'ஏர் கார்கோ' பிரிவில் கோவை விமான நிலையத்துக்கு போட்டியாகதிருச்சி விமான நிலையம் உருவெடுத்துள்ளது. கோவை சர்வதேச விமான நிலையத்தில் மேலும் பல சர்வதேச நாடுகளுக்கு புதிதாக விமான சர்வீஸ் துவக்க வேண்டும். தவிர கார்கோ அனுப்புவதற்கு வசூலிக்கப்படும் கட்டணம் குறைக்கப்பட வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேல் கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்ட பணியை விரைவுபடுத்தி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

இவையெல்லாம் செய்தால் மட்டுமே கோவை சர்வதேச விமான நிலையம் சிறப்பான வளர்ச்சியை எதிர்வரும் நாட்களில் பெறும்என்பது மட்டுமே நிதர்சனமான உண்மை." இவ்வாறு 'ஏர் கார்கோ' வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...