பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இன்று ஒரே நாளில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பகுதியில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட டி.நல்லிக்கவுண்டன்பாளையம், புளியம்பட்டி, வடக்கிபாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட வக்கம்பாளையம். மாக்கினாம்பட்டி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 10 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி நகரப்பகுதிகளில் 18 பேருக்கும் என மொத்தம் இன்று ஒரே நாளில் 46 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பகுதிகளில் சுகாதாரத் துறையினர் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு விதித்துள்ள வழிகாட்டும் நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றாமல் இருப்பதே இதுபோன்று நோய் தொற்று அதிகரிக்க காரணமாக உள்ளது. எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.