விவேக் மரணம் வருத்தமளிப்பதாக சத்குரு இரங்கல்!

கோவை: நடிகர் விவேக் மரணம் வருத்தம் அளிப்பதாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு இரங்கல் தெரிவித்துள்ளார்.


கோவை: நடிகர் விவேக் மரணம் வருத்தம் அளிப்பதாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர்‌ சத்குரு ட்விட்டர்‌ பக்கத்தில்‌ வெளியிட்டுள்ள பதிவில்‌, “விவேக்‌ - தனது கலையில்‌ ஜாம்பவானாகத்‌ திகழ்ந்து, கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்தவர்‌. தமிழ்நாட்டில் மரங்கள்‌ நடும்‌ மாபெரும்‌ திட்டத்தை தொடங்கியதற்கு என்றும்‌ நம்‌ நினைவில்‌ நிற்பார்‌ - அவர்‌ இதயம்‌ இந்த மண்ணுக்காகவும்‌ மக்களுக்காகவும்‌ வாழ்ந்தது. என்‌ ஆழ்ந்த இரங்கல்கள்‌ & குடும்பத்தினருக்கு ஆறுதல்” என்று தெரிவித்துள்ளார்‌.

https ://twitter.com/SadhguruJV/status/1383368140856328194 ?s=19

மேலும்‌, ஈஷா அறக்கட்டளையின்‌ அதிகாரப்பூர்வ ட்விட்டர்‌ பக்கத்தில்‌ வெளியிடப்பட்டுள்ள பதிவில், “நடிகர்‌ விவேக்‌ - ஒரு மகத்தான நடிகர், மக்கள்‌ நலனுக்கு உழைத்தவர்‌, மரங்கள்‌ நடும்‌ சமூக ஆர்வலர்‌, அற்புதமான மனிதர்‌ - அவர்‌ மரணம்‌ மிகுந்த வருத்தமளிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/ishafoundation/status/1383354146103828486 ?s=1002

நமகர்‌ விவேக்‌ அவர்கள்‌ ஈஷா பசுமை கரங்கள்‌ திட்டத்திற்கு ஆரம்ப காலம்‌ முதல்‌ தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தார்‌. மேலும்‌, காவேரி கூக்குரல்‌ இயக்கத்திற்கும்‌ தனது பேராதரவை வழங்கினார்‌. அவர்‌ ஈஷாவின்‌ பல்வேறு நிகழ்ச்சிகளில்‌ சிறப்பு விருந்தினராகவும்‌ கலந்து கொண்டு மக்களிடம்‌ சுற்றுச்சூழல்‌ விழிப்புணர்வை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...