கோவை: பொள்ளாச்சியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கொடிசியாவை போல 600 படுக்கைகளுடன் தயார் நிலையில் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்பட்டது.
கோவை: பொள்ளாச்சியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கொடிசியாவை போல 600 படுக்கைகளுடன் தயார் நிலையில் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி பகுதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகிறது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, நாச்சிமுத்து பிரசவ விடுதி உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், கோவை மருத்துவமனைக்கும் நோயாளிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால், புளியம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் கோவையில் உள்ள கொடிசியாவை போல் 600 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் தயார் நிலையில் உள்ளது.

இந்த நிலையில், இன்று சிகிச்சை மையத்தை சார் ஆட்சியர் வைத்தியநாதன் உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நோய் பாதிப்பு குறைவாக உள்ள நோயாளிகளை கோவை கொடிசியாவுக்கு அனுப்புவதற்கு பதிலாக இங்கேயே அவர்களுக்கு அனைத்து வகையான சிகிச்சையை அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், உணவு, மருந்துகள், கபசுரக் குடிநீர், சித்தா மருத்துவ முறை, மற்றும் யோகா பயிற்சிகள் நோயாளிகளுக்கு வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.