கோவை: கோவை விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், ப்ரீபெய்ட் டாக்ஸி ஓட்டுனர்கள் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இது குறித்து கோவை ஏர்போர்ட் டூரிஸ்ட் டாக்ஸி டிரைவர் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பி. கார்த்திகேயன் கூறுகையில், "௭ங்கள் சங்கத்தில் 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். நோய்தொற்று வேகமாக பரவி வருவதை அடுத்து அரசு வழிகாட்டுதலின்படி நேற்று விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ப்ரீபெய்ட் டாக்ஸி மற்றும் டூரிஸ்ட் டாக்ஸி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஏர்போர்ட் வளாகத்தில் நேற்று நடந்த சிறப்பு முகாமில் 250க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்பொழுது ஏர்போர்ட்டில் வெளிநாட்டு விமான சேவை பிரிவில் ஷார்ஜாவுக்கு மட்டும் விமான சர்வீஸ் வழங்கப்படுகிறது. உள்நாட்டு பிரிவில் பல்வேறு நகரங்களுக்கு சேவை வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கோவை விமான நிலையத்தில் இயக்கப்படும் அனைத்து ப்ரீபெய்ட் டாக்ஸி மற்றும் டூரிஸ்ட் டாக்ஸி ஓட்டுனர்கள் அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வருகின்றனர்," இவ்வாறு அவர் தெரிவித்தார்.